உலகம்

இரண்டு திருமணம் செய்யவில்லை எனில் சிறை? விசித்திரம் சட்டம்

Published

on

இரண்டு திருமணம் செய்யவில்லை எனில் சிறை? விசித்திரம் சட்டம்

வடகிழக்கு நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், சிறை தண்டனை அளிக்கும் வினோத சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக பரவிய தகவல் விவாத பொருளாகியுள்ளது.

எரித்திரியா நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் தொகை விகிதத்தை சரிவிகிதத்தில் கொண்டுவர வேண்டிய கட்டாயம் எரித்திரிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய புதிதாக சட்டம் ஒன்று இயற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளாதாக செய்தி ஒன்று உலா வருகிறது. இதுதான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

அதாவது ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களையாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த சட்டம் கூறுவதாக பரவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில், பலரும் memes தயார் செய்து கிண்டலுடன் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த செய்தி பொய்யானது என்று பிபிசியின் அறிக்கை கூறுகிறது.

அந்நாட்டில் எந்த சட்டமும் ஆண்கள் இரு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் சிறை என்று விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version