உலகம்

வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை தமிழர்!

Published

on

வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை தமிழர்!

நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தலில் தேசிய கட்சி சார்பில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் அக்டோபர் மாதம் 14 -ம் திகதி, சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளுகின்ற தொழில் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான தேசிய கட்சிக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.

இதில், இந்த இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இருந்தாலும், சிறு கட்சிகளின் உதவியுடன் தேசிய கட்சி வாய்ப்பை பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சியான தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் என்பவர் இடம்பிடித்துள்ளார்.

இவர், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கட்டுமான திட்ட பணிகளில் ஆலோசகராக இருந்துள்ளார்.

மேலும், இலங்கையின் யாழ் புனித ஜான் கல்லூரி மற்றும் கொழும்பில் உள்ள ரோயல் கல்லூரியில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version