இந்தியா

கனடா – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே இரகசிய சந்திப்பு

Published

on

கனடா – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே இரகசிய சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையே, இரகசியமாக சந்திப்பொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான S. ஜெய்ஷங்கர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அவரும் கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான மெலனி ஜோலியும் (Melanie Joly) இரகசியமாக சந்தித்துப் பேசியதாக சர்வதேச பத்திரிக்கை ஒன்று செய்தி வெள்யியட்டள்ளது.

இந்நிலையில், குறித்த சந்திப்பு இரகசியமாக நடைபெற்றதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ள நிலையில், கனேடிய வெளியுறவு அமைச்சகம் அது குறித்து எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், கனேடிய தூதரக அதிகாரிகள் சிலர் இந்தியாவை விட்டு வெளியேறவில்லை என்று குறித்த பத்திரினை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை இந்தியாவிலிருந்து திருப்பி அழைத்துக்கொள்ள, இந்தியா கனடாவுக்கு விதித்திருந்த கெடு, இம்மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version