உலகம்

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்த இந்தியருக்கு அனுமதி: கனடா சர்ச்சை முடிவு

Published

on

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்த இந்தியருக்கு அனுமதி: கனடா சர்ச்சை முடிவு

கனடா இந்திய தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஒரு சூழலிலும், தன் வீட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தங்க அனுமதியளித்த இந்தியர் ஒருவரை கனடாவுக்குள் நுழைய அனுமதிப்பது என கனடா முடிவு செய்துள்ளது.

Kamaljit Ram என்பவர், 1982 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு தனது வீட்டில் இடமளித்து, அவர்களுக்கு உணவு முதலான விடயங்களையும் வழங்கிவந்துள்ளார்.

அவர் 10 ஆண்டுகளாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு இடமளித்தவர் என்பது தெரியவந்ததால், அவரை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என கனடா அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் தீர்ப்பாணையம் ஒன்று, கனடா அரசின் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளது.

கமல்ஜீத் ராம், ஆயுதங்களுடன் வந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தன்னிடம் தங்குவதற்கு இடம் கேட்டபோது, அவர்களுக்கு இடமளிக்காவிட்டால் தனக்கு ஆபத்து நேரிடும் என பயந்தே அவர்களுக்கு இடமளித்ததாக கூறி, புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் தீர்ப்பாணையம் அவரை கனடாவுக்குள் அனுமதிக்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டதற்கு இந்தியா மீது கனடா பழி சுமத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சர்ச்சைக்குரிய முடிவை கனடா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version