உலகம்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற பெண்!

Published

on

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற பெண்!

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும், பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும் கிளாடியா கோல்டினுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் (Alfred Nobel) எனும் வேதியியல் பொறியாளரின் பெயரால் 1901லிருந்து மருத்துவம், பௌதீகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய 5 துறைகளில் மனித குலத்திற்கு பயனுள்ள சாதனைகளை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு எனும் உலக புகழ் பெற்ற விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி கடந்த 2ம் திகதி முதல் தொடங்கியது.

ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், கிளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Exit mobile version