உலகம்
தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!
தமிழகத்தில் பயங்கர வெடி விபத்து; சிக்கிய 13 பேர் பலி!
இந்தியாவில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள அத்திப்பள்ளி பட்டாசுகடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
வழமைபோன்று வேலை செய்துக்கொண்டிருக்கும் போது திடீரென பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு கடைக்குள் இருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டு, ஒரு சிலர் சிறிய காயத்துடன் வெளியே ஓடி உயிர் தப்பிய நிலையில், உள்ள சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்தின் போது, கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்து சேதம் அடைந்துள்ளது.
மேலும் இந்த விபத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.