உலகம்

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்!

Published

on

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் தற்போது குறைந்தது 320 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வுத் துறையின்படி, ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் இன்றையதினம் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெராட் நகருக்கு வடமேற்கே 25 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அதைத் தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கங்கள் ஃபரா மற்றும் பட்கிஸ் மாகாணங்களையும் உலுக்கியுள்ளதுடன் அங்கு வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version