உலகம்
மனைவியைக் கொலை செய்த Bigg Boss பிரதீப் ஆண்டனியின் தந்தை…
மனைவியைக் கொலை செய்த Bigg Boss பிரதீப் ஆண்டனியின் தந்தை…
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 7-ஆவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டிருப்பவர் பிரதீப் ஆண்டனி. இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கவினின் நண்பரும், திரைப்பட நடிகருமாவர்.
அந்தவகையில் அருவி, வாழ் படங்களில் முன்னணி நடிகராக நடித்த பிரதிப் ஆண்டனி, கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரதீப் தான் சொல்வது தான் சரி என்ற எண்ணத்தில் மற்ற போட்டியாளர்கள் பற்றி ஒவ்வொரு குறையும் கண்டுபிடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக் கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது நேற்றைய தினம் பவா செல்லத்துரை எச்சில் துப்பிய விடயத்தை கூட ஊதிப் பெரிதாக்கியதாக குறை கூறப்பட்டது.
இவ்வாறு பிக்பாஸ் 7இல் துடினமான போட்டியாளராக விளங்கி வருகின்ற பிரதீப் ஆண்டனிக்கு சோகமான ஒரு பக்கமும் உண்டு. அதாவது மது போதை காரணமாக பிரதீப்பின் தந்தை பிரதீப்பின் தாயைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விடயத்தை அறிந்த ரசிகர்கள் பிரதீப்பிற்கு நடந்த இந்த துயர சம்பவத்திற்காக கண் கலங்கி வருகின்றனர்.