உலகம்
மின்னஞ்சல் மூலம் மிரட்டல்… பாதுகாப்பை அதிகரித்த ஆசிய நாடு
மின்னஞ்சல் மூலம் மிரட்டல்… பாதுகாப்பை அதிகரித்த ஆசிய நாடு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை அடுத்து 42 விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து விசாரிக்கவும் பிலிப்பைன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பயணிகள் விமான போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து வணிக ரீதியான விமான நிலையங்களிலும் உடனடியாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், செபு, பிகோல், தாவோ மற்றும் பலவான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் என்றே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செபு மற்றும் பலவான் தீவுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குவியும் பிரபலமான பகுதிகளாகும்.