உலகம்
நெற்றியில் திருநீறு இல்லாத வள்ளலார்: வெடித்த சர்ச்சை
நெற்றியில் திருநீறு இல்லாத வள்ளலார்: வெடித்த சர்ச்சை
வள்ளலார் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தை பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற புரட்சித் துறவி வள்ளலாருக்கு இன்று 200 ஆம் ஆண்டு பிறந்தநாள்.
சூழ்ச்சிகளால் வரலாற்றை திரிப்பவர்கள், எவ்வளவு முயற்சித்தாலும் வள்ளலார் என்றுமே சமத்துவத்தின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்வார்.
உலகில் சகல துன்பங்களுக்கும் காரணம் பசிக்கொடுமை தான் என்றுணர்ந்த வள்ளலார் வடலூரில் அன்று மூட்டிய அணையா அடுப்பின் நெருப்பு ஒளி தான் இன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பரந்திருக்கிறது.
வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை உலகறிய செய்வோம். நாமும் கடைப்பிடிப்போம்” என கூறி வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு ஆளுநரின் சனாதன கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இருக்கிறது என சிலர் கூறி வருகின்றனர். மேலும், வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தை பகிர்ந்துள்ளதற்கு சிலர் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது, திருநீறு குறித்து பல்வேறு பாடல்களைப் பாடிய வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இல்லை என கூறி வருகின்றனர். அது போல முதலில், தனிப்பெருங்ருணை’ என்று தவறாக பதிவிட்டார். பின்னர் வந்த பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு ‘தனிப்பெருங்கருணை’ என மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாம், காலை உணவு திட்டத்தை பற்றியும் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.