உலகம்

128 ஆண்டுகளாக மம்மியாக பதப்படுத்திவைக்கப்பட்ட திருடனின் உடல் அடக்கம்

Published

on

128 ஆண்டுகளாக மம்மியாக பதப்படுத்திவைக்கப்பட்ட திருடனின் உடல் அடக்கம்

128 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒரு மனிதர் இப்போது அடக்கம் செய்யப்படுகிறார்.

நவம்பர் 19, 1895-ல் இறந்த அவர் வரும் சனிக்கிழமை அதாவது அக்டோபர் 7 (2023) அன்று தகனம் செய்யப்படுவார்.

உண்மையின் இறந்த நபர் ஒரு சிறு திருடன். சிறையில் இருந்தபோது சிறுநீரகக் கோளாறால் மரணமடைந்தார். ஆனால் அவர் தனது உண்மையான பெயரைக் கூறாததால் அவரது சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க சிறை அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் அவரது விவரம் தெரியவில்லை

இதனால், இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாததால், சடலம் மம்மியாக மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அப்போதிருந்து, மம்மி பாதுகாப்பாக உள்ளது. அவரது சூட் மற்றும் டை இன்னும் அப்படியே உள்ளது. அவரது முடி மற்றும் பற்களும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா சிறையில் உயிரிழந்த திருடனின் உடலை அதிகாரிகள் மம்மியாக மாற்றியுள்ளனர். இதன் விளைவாக, அமெரிக்காவின் சிறிய நகரமான ரீடிங்கில் கடந்த 128 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ‘ஸ்டோன்மேன் வில்லி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த மம்மியின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை (அக்டோபர் 7) நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா சிறையில் சிறுநீரக செயலிழப்பால் நவம்பர் 19, 1895 அன்று ஒரு திருடன் இறந்தான். அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க சிறைத்துறை அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவரை சிறைக்கு கொண்டு வரும்போது பதிவான விவரங்களை வைத்து உறவினர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் விசாரணையில் திருடன் தனது பெயரைச் சொல்லாமல் வேறு பெயரைச் சூட்டியிருப்பது தெரிய வந்தது. அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

எனவே உடலை இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் சென்றனர். அரசு அனுமதியுடன் அங்கிருந்த ஊழியர்கள், அப்போது தங்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச அறிவைக் கொண்டு இறந்த உடலை மம்மியாக மாற்றியுள்ளனர். அந்த மம்மி காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மம்மியைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

சூட் மற்றும் ஷூ அணிந்திருந்த மம்மியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். 128 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த மம்மியின் முடி மற்றும் பற்கள் அப்படியே உள்ளது. சில பண்டைய ஆவணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வில்லியின் ஐரிஷ் வேர்களை அதிகாரிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். ஆனால் மம்மியின் இறுதிச் சடங்குகளை அவர்களே செய்ய முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ரீடிங் வீதிகள் வழியாக மம்மியின் இறுதி ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Exit mobile version