உலகம்

பொது நிகழ்ச்சி ஒன்றின்போது கதறியழுத பிரித்தானிய இளவரசி

Published

on

பொது நிகழ்ச்சி ஒன்றின்போது கதறியழுத பிரித்தானிய இளவரசி

பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது ஆசிரியை ஒருவரைக் கண்ட பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ், அழுகையை அடக்கமுடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசியான பீட்ரைஸ், சிறுவயதில் Dyslexia என்னும் கற்றல் குறைபாடு பிரச்சினையால் அவதியுற்றாராம். Taare Zameen Par என்னும் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த Dyslexia என்றால் என்ன என்பது நன்கு புரியும்.

இளவரசிக்கு அந்த கற்றல் குறைபாடு பிரச்சினையை மேற்கொள்ள, Hillary Leopard மற்றும் Wendy Miles என்னும் இரண்டு ஆசிரியைகள் பெரிதும் உதவினார்களாம். அவர்கள் என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இன்றைக்கு நான் இருக்கும் நிலையை என்னால் அடைந்திருக்கமுடியாது என்கிறார் பீட்ரைஸ்.

சமீபத்தில் தொண்டு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டாராம் இளவரசி பீட்ரைஸ். அப்போது, அந்தக் கூட்டத்தில் தனது ஆசிரியையான Hillary Leopard நிற்பதை தற்செயலாக கவனித்த பீட்ரைஸ், அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறிவிட்டாராம்.

இளவரசி அழ, அவரைப் பார்த்து அவரது ஆசிரியையான Hillary அழ, தாங்கள் ஒரு கூட்டத்தில் நிற்பதையே மறந்துவிட்டிருக்கிறார்கள் இருவரும்.

Dyslexia தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றின் தூதுவராக இருக்கும் இளவரசி பீட்ரைஸ், தான் தனது ஆசிரியையான Hillaryயை தினமும் நினைப்பதாக கூறுகிறார்.

எவ்வளவு அதிர்ஷ்டசாலி நான் என்று கூறும் பீட்ரைஸ், எனது கற்றல் குறைபாட்டை மேற்கொள்வதற்காக என்னுடன் எனது ஆசிரியை செலவிட்ட நேரத்தை இப்போதும் எண்ணிப்பார்க்கிறேன் என நெகிழ்கிறார்.

Exit mobile version