Connect with us

உலகம்

பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்

Published

on

6 3 scaled

பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது அஸ்வின் வெளியே கடைக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அருகே உள்ள தாமஸ் என்பவரின் வீட்டில் உள்ள மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அதில் இருந்து எதிர்ப்பாராதவிதமாக அஸ்வின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

அப்போது, அவரைக் காப்பாற்ற சென்ற தாய் சித்ரா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், அவர்களை இருவரையும் காப்பாற்ற சென்ற ஆதிராவையும் மின்சாரம் தாக்கியது.

இதில், மின்சாரம் தாக்கிய மூவரும் நிகழ்விடத்திலேயே கிடந்துள்ளனர். பின்பு, மழை நின்ற பிறகு அக்கம், பக்கத்தினர் பார்த்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பொலிசார், மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்19 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசிபலன் : 3 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 3.11.2024, குரோதி வருடம் ஐப்பசி 17 ஞாயிற்று கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள சேர்ந்த ரேவதி, அனுஷம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 2 நவம்பர் 2024 – Daily Horoscope

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று போராட்டத்திற்கு இடையே எந்த ஒரு பிரச்சனையிலும் தீர்வு காண்பீர்கள். திடீரென சில பயணங்கள் செல்ல நேரிடும். குடும்பத்தினரின்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 1 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 1.11. 2024, குரோதி வருடம் ஐப்பசி 15 வெள்ளிக் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் புரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 31 அக்டோபர் 2024 – Daily Horoscope

Happy Diwali இன்றைய ராசிபலன் 31.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 14, வியாழக் கிழமை, சந்திரன் கன்னி, துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம், மீனம் ராசியில் பூரட்டாதி...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் : 30 அக்டோபர் 2024 – Daily Horoscopeஇன்றைய ராசிபலன் 30.10.2024,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 29 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 29 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 29.10.2024, குரோதி வருடம் ஐப்பசி 12, செவ்வாய்க் கிழமை, சந்திரன் சிம்மம்,...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் : 28 அக்டோபர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 28 அக்டோபர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 28.10.2024 குரோதி வருடம் ஐப்பசி 11, திங்கட் கிழமை, சந்திரன் சிம்மம்...