உலகம்
கூகுள் Maps பின்பற்றி ஓட்டி ஆற்றில் கவிழ்ந்த கார்
கூகுள் Maps பின்பற்றி ஓட்டி ஆற்றில் கவிழ்ந்த கார்
கேரளாவில் பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை கோதுருத் பகுதியில் உள்ள பெரியாறு ஆற்றில் கார் கவிழ்ந்ததில் இரண்டு இளம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் அத்வைத் (29), அஜ்மல் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்வைத் மற்றும் அஜ்மல் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுடன் பயணித்த மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கூகுள் மேப்பை பின்பற்றியபடி சாரதி அப்பகுதியை அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால், கனமழை காரணமாக சாலை தெரியாததால், கூகுள் மேப் காட்டிய வழியையே பின்பற்றினர்.
எவ்வாறாயினும், கூகுள் மேப்ஸ் சுட்டிக்காட்டப்பட்டபடி கார் இடதுபுறம் திரும்புவதற்குப் பதிலாக தவறுதலாக முன்னோக்கிச் சென்று ஆற்றில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஒரு பெண் உட்பட மூன்று பயணிகள் மீட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இறந்த இரு மருத்துவர்களின் உடல்களை மீட்க ஸ்கூபா டைவிங் குழுவை அதிகாரிகள் அனுப்பினர்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.