இலங்கை
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை கணவனின் செயல்
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை கணவனின் செயல்
இத்தாலியில் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிராக்யூஸின் பகுதியில் வசித்து வந்த 36 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மனைவியை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவரது மனைவியின் விரும்பம் இன்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதுடன், அவரது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.