உலகம்

கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் உளவாளியா? வெளியான பரபரப்பு தகவல்கள்

Published

on

கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் உளவாளியா? வெளியான பரபரப்பு தகவல்கள்

கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டிய விடயத்தால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லப்பட்ட நபர் குறித்து அவரது மகன் கூறியுள்ள விடயங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் மகன் தெரிவித்துள்ள சில தகவல்களால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் மகனான பல்ராஜ் சிங் நிஜ்ஜர் (Balraj Singh Nijjar, 21), தன் தந்தை, அடிக்கடி கனேடிய உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்துவந்ததாக தெரிவித்துள்ளார்.

தன் தந்தை நிஜ்ஜர், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்துவந்ததாக பல்ராஜ் சிங் கூறியுள்ளதுடன், ஜூன் 18ஆம் திகதி அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, அவர்களை சந்தித்ததாகவும், அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகும் அவர்களை சந்திக்கும் திட்டம் அவருக்கு இருந்ததாகவும் வான்கூவர் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், Economic Times பத்திரிகை வெளியிட்டுள்ளசெய்தி ஒன்றில், நிஜ்ஜர் கனேடிய உளவுத்துறை அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துவந்துள்ளதை வைத்து பார்க்கும்போது, அவர் கனேடிய உளவுத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக இருக்கலாம் என கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version