உலகம்

கனேடிய நாடாளுமன்றில் மன்னிப்புக் கோரிய ட்ரூடோ

Published

on

கனேடிய நாடாளுமன்றில் மன்னிப்புக் கோரிய ட்ரூடோ

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்து யூத மக்களின் நினைவுகளை மீறியது தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் கடந்த 22 ஆம் திகதி விஜயம் செய்திருந்த 98 வயதான போர் வீரர் யாரோஸ்லாவ் ஹூன்கா கனடா நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் 2-ம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்றும் இலட்சக்கணக்கான யூத மக்கள் உயிரிழக்க காரணமானவர் எனவும் தகவல் பரவியது.

அதனை தொடர்ந்து அவரை கௌரவித்தமை தொடர்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தச் சபையில் உள்ள அனைவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்காக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் தூதர்கள் ஆகியோரிடமும் இது குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

ஒருவரின் பின்னணி குறித்துத் தெரியாமல் அவரை கௌரவித்தது பெரிய தவறு. இது நாஜி ஆட்சியின் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

இதற்காக நான் பகிரங்கமாக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந்த விடயம் தொடர்பில் பலரும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் எதற்குப் போராடுகிறது என்பது உலக நாடுகளுக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகச் சாடியுள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து கனடா அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ட்ரூடோ “இது தெரியாமல் நடந்த தவறு. இதை வைத்து சிலர் உக்ரைன் நாஜிக்களுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்வது எதற்காகப் போராடுகிறது மோசமான செயல்.

இந்த தவறை அரசியலாக்க நினைப்பது மிகவும் கவலை அளிக்கிறது. சபாநாயகர் தன்னிச்சையாக அவரை அழைத்துப் பாராட்டினார். இந்த செயலுக்குக் கனடா அரசு காரணமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version