உலகம்

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா

Published

on

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா

கனடா – இந்தியாவுக்கு இடையே இறுக்கமான சூழல் நீடித்துவரும் நிலையில், கனடாவில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள் எதிர்காலம் தொடர்பில் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையை அடுத்து, இரு நாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் கனடாவுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இந்த கொலை விவகாரத்தில் விசாரணைக்கு தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கனடாவுக்கான விசா சேவைகளை இந்திய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது தற்போது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தளை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்திய மாணவர்கள். இதன் மூலம் கனடா பெரும் வருவாய் ஈட்டி வருகிறது. மேலும், கனேடிய தனியார் பல்கலைக்கழகங்கள் பல சர்வதேச மாணவர்கள் மூலம் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்றன.

இதில் பெரும்பாலான மாணவர்கள் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 1.36 லட்சம் மாணவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்கின்றனர்.

இதனூடாக கனேடிய பொருளாதாரம் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ரூ.68,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு இடம்பெயரும் மொத்த இந்திய மாணவர்களில், 60 சதவீத மாணவர்கள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.

இதுவே, கனடாவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகமாக புழங்கும் ஒரு நாடாக மாற்றியுள்ளது. கனடாவுக்கான விசா சேவையை இந்தியா இடைநிறுத்தினாலும், இந்திய மாணவர்களுக்கான விசா சேவை தொடரும் என்றே கனடா அறிவித்துள்ளது.

Exit mobile version