உலகம்

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல்

Published

on

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தாக்குதலுக்கு திட்டமிட்டார்: வெளியான புதிய தகவல்

கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கியர் தலைவர், இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர். இந்திய தரப்பில் அவர் காலிஸ்தான் பிரிவினைவாதி மற்றும் தீவிரவாதி என குற்றஞ்சாட்டப்படுபவர்.

1980களில் இருந்தே இவர் குற்ரச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். 1996ல் போலி கடவுச்சிட்டு மூலமாக கனடாவுக்கு தப்பியுள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கனடாவில் லொறி சாரதியாகவும் சீக்கியர்கள் தலைவராகவும் வலம் வந்துள்ளார். அத்துடன் பாகிஸ்தான் சென்று ஆயுதப்பயிற்சியும் வெடிகுண்டு பயிற்சியும் முன்னெடுத்துள்ளார்.

மட்டுமின்றி, கனடாவில் இருந்துகொண்டே, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு கொலை சம்பவங்களை நடத்தியுள்ளார் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கனடாவில் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தும் குழுக்களுடன் இணைந்து நிதி திரட்டி தீவிரவாத செயல்களை முன்னெடுத்துள்ளார். முன்னாள் பஞ்சாப் முதலமைச்சரை படுகொலை செய்த Jagtar Singh Tara என்பவருடன் இணைந்து நிஜ்ஜர் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

2014ல் ஹரியானா மாகாணத்தில் அமைந்துள்ள Dera Sacha Sauda தலைமையகத்தை தகர்க்க நிஜ்ஜர் திட்டம் வகுத்ததாகவும், ஆனால் இந்தியாவில் அவரால் வர முடியாமல் போகவே, அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version