உலகம்

சீன பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாயம்: காணாமல் போன முக்கிய நபர்கள்

Published

on

சீன பாதுகாப்பு அமைச்சர் திடீர் மாயம்: காணாமல் போன முக்கிய நபர்கள்

சீனாவில் ஊழல் விசாரணையை எதிர்கொள்ளும் பாதுகாப்பு அமைச்சர் திடீரென்று மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் திடீரென்று மாயமாவது தற்போது அதிகரித்து வருவதாகவே கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் விசாரணை வட்டத்தில் இருந்துள்ளார்.

இந்த அமைப்பானது விசாரணை முன்னெடுக்கிறது என்றால், தொடர்புடைய நபர் கட்சி விதிமுறைகள் அல்லது நாட்டின் சட்டங்களை மீறியுள்ளதாகவே கருதப்படுவார். மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் ராணுவ அதிகாரி என்றால் கட்சி சார்ந்த விசாரணை அமைப்பே விசாரித்து தண்டனை வழங்கும்.

பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு மாயமாகும் முன்னர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கின் கேங் கடந்த ஜூன் 25ம் திகதியில் இருந்தே மாயமாகியுள்ளார். ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் 10 பேர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகத்து 29ம் திகதி கடைசியாக பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு பொதுவெளியில் காணப்பட்டுள்ளார். மட்டுமின்றி, ஆகத்து தொடக்கத்தில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கும் லி ஷாங்ஃபு சென்று வந்துள்ளார்.

லி ஷாங்ஃபு நாடு திரும்பிய சில நாட்களில் விசாரணை துவங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், செப்டம்பர் 7 மற்றும் 8ம் திகதிகளில் வியட்நாம் பயணத் திட்டத்தை செப்டம்பர் 3ம் திகதி பாதுகாப்பு அமைச்சகம் ரத்து செய்தது.

இதேப்போன்று, ரஷ்யா மற்றும் வியட்நாம் அதிகாரிகளை சந்தித்து திரும்பிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கின் கேங் அதன் பின்னர் மாயமாகியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை தொடக்கம் முதல், சீனாவின் முன்னாள் தொழில்துறை அமைச்சர் சியாவோ யாகிங் மாயமாகியுள்ளார். இன்னொரு ராணுவ தளபதி 60 வயதான Li Yuchao மாயமாகியுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்தே இவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Exit mobile version