உலகம்

ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்: உக்ரைனுக்கு ஏற்பட்ட நிலை!

Published

on

ரஷ்யா சரமாரி ட்ரோன் தாக்குதல்: உக்ரைனுக்கு ஏற்பட்ட நிலை!

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததுடன் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளும் பிற நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்து பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிபர் ஜோ பைடனை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில் உக்ரைனிய வான் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான புதிய உதவி தொகுப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷ்யா சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பல குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்தது. தெற்கு உக்ரைன் பகுதியில் உள்ள கெர்சன் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 18பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version