Connect with us

உலகம்

இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ!

Published

on

333 scaled

இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ!

சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த திட்ட பொறியாளருக்கு சம்பளம் வழங்காததால், இட்லி வியாபாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் மூலம் நிலவுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும், திட்டத்திற்கு பணியாற்றிய பொறியாளர் ஒருவர் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுவது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனம் இணைந்து பணியாற்றியது.

இந்த நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில், மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் பணியாற்றி வந்தார். இவர், இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்காக மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தீபக் குமார் பணியாற்றிய ஹெச்.இ.சி நிறுவனம் தங்களுடைய 2,800 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.

இதனால், தீபக் குமார் தன்னுடைய மகள்களுக்கு பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். எனவே, செலவே சமாளிக்க முடியாத காரணத்தினால் ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டடத்திற்கு எதிரே சாலையில் ஒரு சிறிய உணவகத்தை அமைத்து இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தின் செலவை பார்த்து வருகிறார். அதாவது, காலையில் ஹெச்.இ.சி நிறுவனத்திற்கு சென்று பணியாற்றிவிட்டு, மாலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.

Advertisement

ஜோதிடம்

tamilni 151 tamilni 151
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.12.2023 – Today Rasi Palan

இன்று டிசம்பர் 11ம் தேதி (கார்த்திகை 25) திங்கள் கிழமை, சந்திரன் விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இன்று மரண யோகம்...

rtjy 75 rtjy 75
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 10.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 24 ஞாயிற்று கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷ ராசியில் உள்ள ரேவதி,...

rtjy 62 rtjy 62
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 23 சனிக் கிழமை, சந்திரன்...

tamilni 109 tamilni 109
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 08, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 22 வெள்ளி கிழமை, சந்திரன்...

rtjy 35 rtjy 35
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilni 81 tamilni 81
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 06, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 20 புதன் கிழமை, சந்திரன்...

rtjy 32 rtjy 32
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 19 செவ்வாய்க் கிழமை, சந்திரன்...