உலகம்

சர்வாதிகாரி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்: சீனா கண்டனம்

Published

on

சர்வாதிகாரி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்: சீனா கண்டனம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சர்வாதிகாரி என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது இருநாடுகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் பெருவாரியான மேற்கத்திய நாடுகள் உக்ரைன் பக்கம் ஆதரவாக நின்று வருகின்றனர், ஆனால் ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டை தவிர எந்தவொரு நாடும் வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை.

வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு மறைமுகமாக ஆதரவை மட்டுமே வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக், “இந்த போரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் வெற்றி பெற்றுவிட்டால் அது எத்தகைய அடையாளத்தை தரும்? சீனாவின் தலைவரான ஜி ஜின்பிங் போன்ற உலகின் பிற சர்வாதிகாரிகளுக்கு எத்தகைய அறிகுறியை தரும்? என பேசியுள்ளார்.

பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துடனான பேட்டி ஒன்றில் அன்னலெனா பேர்பாக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஜேர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் கருத்துக்கு பெய்ஜிங் உடனடியாக ஜேர்மனிக்கு தங்களுடைய எதிர்ப்பை அனுப்பி வைத்துள்ளது.

germany-minister-calls-china-xi-jinping-a-dictator:சர்வாதிகாரி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்: ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கருத்துக்கு சீனா கண்டனம்

இது சீனாவின் அரசியல் கெளவரத்தை ஆழமாக சேதப்படுத்துவதாகவும், நேரடி அரசியல் ஆத்திரமூட்டல் என்று சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கடுமையாக சாடியுள்ளார்.

Exit mobile version