ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து! வெளியான தகவல்கள்
ஐக்கிய அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து! வெளியான தகவல்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்sது இந்தியாவுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து என்ற கனவு மிக விரைவில் சாத்தியமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் கேராளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க உள்ளனர். இதனால் தென்னிந்திய மக்கள், குறிப்பாக குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும்.
கட்டணமாக Dh442 அல்லது இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 ஈடாக்க உள்ளனர். கடல் பயணம் என்பதால், சுமார் 3 நாட்களுக்குள் பயணிகள் கேரளாவுக்கு வந்து சேர முடியும். எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் சேவையை துவங்க முடிவு செய்துள்ளனர்.
இந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் வகையில், கேரள மாநில நிர்வாகம் இந்திய அரசாங்க அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். டிக்கெட் கட்டணமாக Dh442 மற்றும் Dh663 என முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய அமீரகத்தில் விடுமுறை காலம் என்றால், கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றே கூறுகின்றனர். மூன்று நாட்கள் பயணம், ஒவ்வொரு பயணியும் 200 கிலோ வரையில் பொதிகளை எடுத்து வரலாம்.
மட்டுமின்றி, ஒருமுறை பயணத்தில் 1,250 பயணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும். வித விதமான உணவு வகைகள் மற்றும் பொழுபோக்கு அம்சங்களும் உட்படுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். முதற்கட்டமாக கேரளாவில் கொச்சி மற்றும் பேப்பூர் பகுதிகளுக்கு போக்குவரத்தை தொடங்க உள்ளனர்.