இலங்கை
இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?
இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சீனா எப்படி இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
இதன்படி இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு வடகொரிய அதிபர் சென்றமை தொடர்பிலும் ரஷ்யாவிற்கு வடகொரியா எவ்வாறு ஆயுதங்களை வழங்கவுள்ளது குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவிடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யாவிற்கு கூடுதல் ஆயுதங்கள், உணவு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவிற்கு பெற உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா, மூன்றாம் தரப்பான வடகொரியா மூலம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போர் வரும் குளிர்காலத்தில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும். இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்தத்தின் போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், அதே நிலைதான் இன்று ரஷ்யாவிற்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.