உலகம்
ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்


ரஷ்யாவிடம் இருந்து கிம் ஜோங் உன் பெற்றுக்கொண்ட பரிசுகள்
ரஷ்யாவில் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கிம் ஜோங் உன், நாடு திரும்பியுள்ள நிலையில், அவருக்கு ரஷ்யா அளித்த பரிசுகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒருவார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். அவரது திடீர் ரஷ்ய பயணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருந்தது.
அவர் உக்ரைனுக்கு எதிராக ஆயுதங்களை ரஷ்யாவில் குவிக்க இருக்கிறார், இனி இரு தலைவர்களும் சேர்ந்து மேற்கத்திய நாடுகளின் அமைதியை குலைப்பார்கள், ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யா தானியங்களை வடகொரியாவுக்கு வழங்கும் என பட்டியல் நீண்டது.
ஆனால் இவை அனைத்தும் மேற்கத்திய ஊடகங்களின் கற்பனையே என சில அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் வடகொரியாவிலும் ரஷ்யாவிலும், இதுபோன்ற தகவல்களை கசியவிட உளவாளிகள் எவரையும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதுவரை முயற்சிக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் கிம் ஜோங் உன் முன்னெடுக்கும் முதல் வெளிநாட்டு பயணம் இது. சனிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த கிம் ஜோங், அவருடன் hypersonic ஏவுகணை அமைப்பு உட்பட ஆபத்தான ஆயுதங்கள் பலவற்றையும் பார்வையிட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் ரஷ்யாவின் மாகாண ஆளுநர் ஒருவர், வடகொரியாவுக்கு என kamikaze ட்ரோன்கள் ஐந்தும் Geran-25 ட்ரோன் ஒன்றும் பரிசளித்துள்ளதாகவும், அத்துடன் அதிநவீன குண்டு துளைக்காத உடைகள் சிலவற்றையும் பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உண்மையில், குவிக்கப்பட்டிருக்கும் வடகொரிய ஆயுதங்கள் மீது ரஷ்யாவுக்கு ஆசை இருப்பது உண்மை தான் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் ஏவுகணை திட்டத்தில் ரஷ்யா உதவ வேண்டும் என வடகொரியா எதிர்பார்ப்பதாக தகவல் கசிந்துள்ளது.