உலகம்
லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11,300 பேர் பலி!
லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11,300 பேர் பலி!
லிபியாவில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,300 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் புயலில் சிக்கி 10,000க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
லிபிய செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, 10,000க்கும் அதிகமானோர் காணவில்லை எனவும், ஆறு நாட்களுக்கு மேலாக தேடுதல் நடவடிக்கை தொடர்வதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் 11,300 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் சர்வாதிகாரி கடாஃபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் அங்கு, ஆயுதமேந்திய குழுக்களின் மோதல் தொடர்ந்து வருகிறது.
மேலும், நீர்வழி நோய்கள் மற்றும் ஆயுத பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.