உலகம்
தரையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்: மொத்த பயணிகளும் மரணம்

தரையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா விமானம்: மொத்த பயணிகளும் மரணம்
அமெரிக்க சுற்றுலா பயணிகளுடன் பிரேசிலின் அமேசானாஸ் மாகாணத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்த பயணிகளும் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான விபத்து தொடர்பில் அமேசானாஸ் மாகாண நிர்வாகம் உறுதி செய்துள்ளது. தலைநகரில் இருந்து 200 மைல்கள் தொலைவில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. இரு விமானிகள் உட்பட மொத்தம் 14 பேர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சடலங்களை மீட்டு தற்போது அருகாமையில் உள்ள பாடசாலையில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், குளிரூட்டப்பட்ட வசதி எதுவும் அப்பகுதியில் இல்லை என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில், பிரேசில் விமானப்படை சார்பில் அதிகாரிகள் உடல்களை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியானது கன மழையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,
இதனால் நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பும் கடினமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர். விபத்து குறித்து பிரேசில் விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது.