உலகம்

இளவரசர் ஹரியின் பிறந்தநாளை ராஜ குடும்பம் மறந்துவிட்டதா?

Published

on

இளவரசர் ஹரியின் பிறந்தநாளை ராஜ குடும்பம் மறந்துவிட்டதா?

பிரித்தானிய இளவரசர் ஹரி, நேற்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜேர்மனி சென்றுள்ள அவர், தன் மனைவி மேகனுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

தாத்தாவின் மறைவு, மகாராணியாரின் மறைவு என கவலையளிக்கும் நிகழ்வுகளையே தொடர்ந்து சந்தித்த ஹரியின் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு நாளாக அமைந்தது அவரது பிறந்தநாள்.

குறிப்பாக, இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகளுக்காக ஹரி தன் காதல் மனைவி மேகனுடன் ஜேர்மனிக்குச் சென்றுள்ள நிலையில், ஒரு மாபெரும் கூட்டம் ஹரிக்கு ‘ஹாப்பி பர்த்டே’ பாடலைப் பாட, மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார் ஹரி.

சாண்ட்ரிங்காம் எஸ்டேட்டில் வாக்கிங் சென்ற இளவரசர் ஹரியின் அண்ணன் இளவரசர் வில்லியம், அங்கு கூடியிருந்த மக்களிடம், தன் தம்பியின் பிறந்தநாளைத் தான் மறக்கவில்லை என்று கூறினார்.

ஆனால், இளவரசர் வில்லியம் தன் தம்பிக்கு வெளிப்படையாக பிறந்தநாள் வாழ்த்துக் கூறவில்லை.

அதேபோல, ஹரியின் தந்தையான மன்னர் சார்லசும் மகனுக்கு வெளிப்படையாக பிறந்தநாள் வாழ்த்துக் கூறவில்லை.

இதுவரை ஹரிக்கு பல்வேறு தருணங்களில் வாழ்த்துத் தெரிவித்த ராஜ குடும்பத்தினர் யாருமே இம்முறை ஹரிக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version