உலகம்

உலகளவில் அதிகளவு போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியல்

Published

on

உலகளவில் அதிகளவு போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியல்

உலகளவில் அதிகபடியான போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முக்கியமான 5 நாடுகள் இந்த தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இவை உலகத்தில் நடைபெறக்கூடிய பெரும்பாலான போர்களை தீர்மானிக்கக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில் சீனா 5 ஆம் இடத்தில் உள்ளதுடன், சீனாவின் போர் தளபாடங்கள் பெருமளவிலானவை அமெரிக்க போர் தளபாடங்களை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 4 ஆம் இடத்தில் ஜெர்மனியும், மூன்றாம் இடத்தை பிரான்ஸ் நாடும் கைப்பற்றியுள்ளது.

ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸின் பங்களிப்பு 8.2 சதவீதம் ஆகும். மேலும் அந்நாடு, போர்க்கப்பல் ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ரஷ்யா உள்ளதுடன், ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 20 சதவீதம் ஆகும்.

உலகம் முழுவதும் சுமார் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ரஷ்யா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.

இந்த தரவரிசையில் அமெரிக்கா முதலாம் இடத்தை பிடித்துள்ளது.ஒட்டுமொத்த ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு 37 சதவீதம் ஆகும். உலகம் முழுவதும் சுமார் 96 நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version