உலகம்

முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி

Published

on

முதன்முறையாக நாடொன்றிற்குச் செல்லும் ஜனாதிபதி

இந்தியாவில் G 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றபின், பங்களாதேஷ் நாட்டிற்குச் செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி.

உச்சி மாநாடுகள், தங்களுக்கு இலக்கு வகுக்கப்பட்ட நோக்கத்துடன் முடிந்துவிடுவதில்லை. அவை மேலும் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வளர்க்க, வலுப்படுத்த உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

அதற்கு நல்லதோர் உதாரணமாக அமைந்துள்ளது, பிரான்ஸ் ஜனாதிபதியின் பங்களாதேஷ் பயணம். ஆம், இந்தியாவில் G 20 உச்சி மாநாடு முடிந்ததும், பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்றுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

சிவப்புக் கம்பளம் விரித்து மேக்ரானுக்கு வரவேற்பளித்துள்ளது பங்களாதேஷ் நாடு. ஹஸ்ரத் ஷாஜஹால் சர்வதேச விமான நிலையத்தில் மேக்ரானை வரவேற்றார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் இணைந்து மேக்ரானுக்கு கௌரவம் செலுத்தி அவரை வரவேற்றனர். 21 குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிகப்பட்டது.

இருதரப்பு ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குப் பின் தலைவர்கள் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர்.

1990ஆம் ஆண்டு, பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த Francois Mitterrandஇன் வருகைக்குப் பிறகு, 33 ஆண்டுகளுக்குப் பின் பங்களாதேஷுக்கு வருகை தரும் இரண்டாவது பிரான்ஸ் நாட்டுத் தலைவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version