உலகம்
நாசாவின் புதிய ஆய்விற்கு தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி
நாசாவின் புதிய ஆய்விற்கு தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய திட்டமான சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிகளுக்கு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திட்டத்தின் தலைவராக பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் கால்பதிக்க உதவும் குறித்த திட்டத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷாக்ட்ரியா மென்பொருள் பொறியியலாளராகவும், ‘ரோபாட்டிக்’ பொறியியலாளராகவும் பணியாற்றி பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கான விண்கலங்களை இயக்குபவராகவும் பணியாற்றியுள்ளார் என
நாசா விண்வெளி ஆய்வு மையமானது இதுவரை காலமும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டுவந்துள்ளது.
அடுத்த கட்டமாக மனிதர்கள் நிலவில் நீண்ட காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தையும், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் செயற்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
குறித்த திட்டமானது நிலவில் துணிச்சலாக பல ஆய்வுகளை மேற்கொள்ளவும், செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாக மனிதர்களை கால்பதிக்க உதவும் எனக் கூறப்படுகின்றது.