உலகம்

பட்டியலின பெண் சமைத்தால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்”- பெற்றோர் தெரிவிப்பு

Published

on

பட்டியலின பெண் சமைத்தால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள்”- பெற்றோர் தெரிவிப்பு

தூத்துக்குடி அருகே காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்கெனவே மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கிவைத்தார்.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பள்ளியில் முனியசெல்வி என்ற பெண் சமையல் செய்யும் பணியாற்றி வருகிறார். இந்தப் பெண் பட்டியலின சமூகத்தைச் சேந்தவர் என்பதால், இந்தப் பெண் சமைத்தால் தங்களது குழந்தைகள் காலை உணவு சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை.

இதையடுத்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் அரசு தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர், சமையலர் உள்ளிட்டோரிம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “சமையலருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றனர்.

விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு அனைத்து குழந்தைகளும் காலை உணவு சாப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். யில் முனியசெல்வி என்ற பெண் சமையல் செய்யும் பணியாற்றி வருகிறார். இந்தப் பெண் பட்டியலின சமூகத்தைச் சேந்தவர் என்பதால், இந்தப் பெண் சமைத்தால் தங்களது குழந்தைகள் காலை உணவு சாப்பிட மாட்டார்கள் என்று பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் குழந்தைகள் உணவு சாப்பிடவில்லை.

இதையடுத்து தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் அரசு தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர், சமையலர் உள்ளிட்டோரிம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “சமையலருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக குழந்தைகள் சாப்பிட மறுக்கின்றனர்.

விரைவில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு அனைத்து குழந்தைகளும் காலை உணவு சாப்பிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Exit mobile version