உலகம்
ரசாயனம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட கனேடிய இளைஞர்
ரசாயனம் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட கனேடிய இளைஞர்
விவாதத்துக்குரிய ஒன்ராறியோ நபரிடம் இருந்து உயிரைக் கொல்லும் ரசாயனம் வாங்கி தமது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கனேடிய தாயார் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒன்ராறியோவை சேர்ந்த கிம் ப்ரோஸர் என்பவர் தெரிவிக்கையில், தமது மகன் 19 வயது ஆஸ்டின் ஒன்ராறியோவை சேர்ந்த 57 வயது கென்னத் லா என்பவரிடமிருந்து சோடியம் நைட்ரைட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
குறித்த கென்னத் லா மீது ஒன்ராறியோவில் மட்டும் தற்கொலைக்கு தூண்டியதாக குறிப்பிட்டு 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆஸ்டின் புத்திசாலித்தனமான, வேடிக்கையான மற்றும் அன்பான உள்ளம் என குறிப்பிட்டுள்ள கிம் ப்ரோஸர்,
தமது மகன் கொரோனா பெருந்தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில், உளவியல் ரீதியாக அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை தமக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு தமது மகன் தற்கொலை எண்ணம் வருவதாகவும் குறிப்பிட்டு,
என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை என பகிர்ந்துகொண்டதை கிம் ப்ரோஸர் பகிர்ந்துகொண்டுள்ளார். 20 வயது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் எஞ்சியிருந்த நிலையில், மார்ச் மாதம் ஆஸ்டின் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஒன்ராறியோவில் தற்கொலைக்கு ஆலோசனை வழங்கியது அல்லது தூண்டியது தொடர்பில் 14 வழக்குகளை கென்னத் லா தற்போது எதிர்கொள்கிறார். மேலும், 40 நாடுகளில் சுமார் 1,200 ரசாயன பொதிகளை கென்னத் லா அனுப்பி வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, 2020ல் இருந்தே கென்னத் லா தமது சட்டவிரோத இணைய பக்கத்தை நடத்தி வந்துள்ளார் என்றே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் மட்டும் 232 பேர் அந்த இணைய பக்கம் ஊடாக ரசாயனம் வாங்கியுள்ளனர். இதில் 88 பேர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.