உலகம்
தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்
தப்பியோடிய கைதியை மடக்கி பிடித்த பிரித்தானிய பொலிஸார்
லண்டன் சிறையில் இருந்து தப்பித்த கைதியை பிரித்தானிய பொலிஸார் சனிக்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட டேனியல் காலிஃபைக் லண்டன் சிறையில் இருந்து இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தப்பிச் சென்றதாக அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் ஓடலாம் என்ற கணிப்பில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாடு தழுவிய தேடுதல் வேட்டை நடைபெற்றது.
பிரித்தானியாவின் ராயல் விமானப்படை தளத்தின் அருகே நடைபெற்ற இரண்டு சம்பவங்களின் தொடர்பில் டேனியல் காலிஃபைக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் லண்டன் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதி டேனியல் காலிஃபைக்-ஐ சனிக்கிழமையான நேற்று காலை 11 மணியளவில் சிஸ்விக் பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
டேனியல் காலிஃபைக் தப்பிச் சென்ற போது சிறைச்சாலையின் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்தார் என்றும், உணவு டெலிவரி வேனின் அடிப்பகுதியில் தொற்றிக் கொண்டு அவர் தப்பிச் சென்று இருக்கலாம் என்று தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் டேனியல் காலிஃபைக் தொடர்பான வழக்கு வூல்விச் கிரவுன் நீதிமன்றத்தில் நவம்பர் 13ம் திகதி தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது.