உலகம்

ஒரு வருடத்தில் 777 படங்கள் பார்த்து உலக சாதனை!

Published

on

ஒரு வருடத்தில் 777 படங்கள் பார்த்து உலக சாதனை!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஒரு வருடத்தில் 777 திரைப்படங்களைப் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார்.

அமெரிக்காவின் ஜாக் ஸ்வோப் ஜூலை 2022 முதல் ஜூலை 2023 வரை 777 திரைப்படங்களைப் பார்த்தவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். அவர் விதிகளை பின்பற்றியதை உறுதி செய்த பின்னரே கின்னஸ் சாதனை கிடைத்தது.

இவருக்கு முன்னதாக, 2015-ஆம் ஆண்டில், ஜாக் ஸ்வோப் பிரான்சின் வின்சென்ட் க்ரோனின் 715 திரைப்படங்களின் சாதனையை முறியடித்தார்.

32 வயதான ஜாக் திரைப்படங்களை விரும்புகிறார். ஒவ்வொரு வருடமும் 100 முதல் 150 படங்கள் வரை பார்க்கும் பழக்கம் கொண்டவர்.

சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஜாக், ‘மில்லியன்ஸ்: ரைஸ் ஆஃப் க்ரு’ படத்தில் தொடங்கி, ‘இந்தியனா ஜோன்ஸ் அண்ட் டயல் ஆஃப் டெஸ்டினி’ வரை பல்வேறு திரைப்படங்களைப் பார்த்தார்.

திரைப்படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாம படம் பார்க்கும் போது வேற எந்த வேலையும் செய்யக்கூடாது. அதாவது, திரைப்படம் பார்க்கும் போது உங்கள் போனை பார்க்கவோ தூங்கவோ கூடாது. படம் பார்க்கும் போது எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது.

ஜாக் இந்த விதிகளை கடைபிடித்தாரா இல்லையா என்பதை கின்னஸ் நிர்வாகத்தினர் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனர். ஜாக் ரீகல் சினிமாஸில் அதிகமான திரைப்படங்களைப் பார்த்தார். ரீகல் சினிமாஸில் அவர் Unlimited Membership எடுத்தார். இதன் விலை 220 அமெரிக்க டொலர் ( இந்திய மதிப்பில் 18,287.50) செலவிட்டுள்ளார். இதனைக் கொண்டு அவர் நிறைய திரைப்படங்களைப் பார்க்கலாம்.

ஜாக் ஒரு பக்கம் தனது வேலை செய்யும் போது இந்த சாதனையில் கவனம் செலுத்தினார். வார இறுதி நாட்களில் காலை 6.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை வேலை பார்த்துவிட்டு தியேட்டருக்கு சென்று மூன்று படங்கள் பார்ப்பார். சில சமயங்களில் அதிக திரைப்படங்களைப் பார்ப்பது வழக்கம்.

Exit mobile version