இலங்கை
பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றிய தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி
பிரித்தானியாவில் இரு குழந்தைகளை காப்பாற்றிய தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி
பிரித்தானியாவில் நீரில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
27 வயதுடைய மோகனநீதன் முருகானந்தராஜா என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் ஏரியில் குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயற்படும் கமெராவினால் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
மோகனின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், இறுதிச்சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.