உலகம்

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பார்கள்

Published

on

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பார்கள்

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெறுவதற்குள் 4 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் இறந்துவிடுவார்கள் என்று புதிய அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே அமெரிக்க வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு பேக்லாக்கில் உள்ள இந்தியர்களிடமிருந்து 11 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.

கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியுரிமை அட்டை என்பது அமெரிக்க குடியேறியவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தர வதிவிடத்தை வழங்கும் ஆவணமாகும். தற்போதைய ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த முயற்சிகள் இந்திய விண்ணப்பதாரர்களை தொடர்ந்து குழப்பி வருகிறது.

அமெரிக்காவில் நிலுவையில் உள்ள 18 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பங்களில் 63% இந்தியர்கள் என்று அமெரிக்க திங்க் கேடோ இன்ஸ்டிடியூட் அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து புதிய விண்ணப்பதாரர்கள் 134 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். அதாவது வாழ்நாள் கடந்து போகும்.

சுமார் 4,24,000 வேலைவாய்ப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள் காத்திருந்து இறக்க நேரிடும். அவர்களில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள்.

அதன்படி, அமெரிக்காவின் கிரீன் கார்டுக்காக காத்திருந்து 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்க நேரிடும் என இந்தப் புதிய அறிக்கை கூறுகிறது.

வேலை வாய்ப்பு சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் 7 சதவீதம் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவும் மிகவும் திறமையானவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

தற்போதைய சூழ்நிலையில் கணிசமான பின்னடைவு இருப்பதாகத் தெரிகிறது. பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்திய-அமெரிக்க சட்டமியற்றும் முயற்சி இருந்தபோதிலும், அமெரிக்க கிரீன் கார்டு காத்திருப்பு நேரம் நெருக்கடியாக மாறியுள்ளது.

Exit mobile version