உலகம்

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி உட்பட 500 தொழிலதிபர்கள் பங்கேற்பு

Published

on

முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா உள்ளிட்ட 500 தொழிலதிபர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டின் இரவு விருந்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்திய தலைநகர் டெல்லியில் வரும் 9, 10 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று கூறிய நிலையில் பல தொழிலதிபர்களும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃப்யுமியொ கிஷிடா, ஜெர்மனி அதிபர் ஓலஃப் ஷோல்ட்ஸ், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதனிடையே, ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்க், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடார் ஆகியோர் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 ஆம் திகதி டெல்லியில் நடைபெறும் இந்த G20 உச்சிமாநாட்டின் உலகத் தலைவர்களுடன் விருந்துக்காக இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களை இந்திய அரசு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அம்பானி மற்றும் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோர் உள்பட 500 தொழிலதிபர்களை இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் G20 தலைவர்களுடன் இந்திய தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை இரவு விருந்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மேலும், இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த பிரதமர் மோடிக்கு மற்றொரு வாய்ப்பை இந்த இரவு உணவு வழங்கும் என நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், விருந்தினர்களுக்கு வழங்கப்படும் மெனுவில் சிறுதானியங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்திய உணவுகள் அடங்கியுள்ளன.

இந்த நிகழ்வு எந்தவித இடையூறும் இன்றி நடைபெறுவதை உறுதிசெய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரை டெல்லியில் பொது விடுமுறை அறிவித்துள்ளார்.

Exit mobile version