உலகம்

ஒரே வீட்டில் 15 உடல்கள் மீட்பு! பலி எண்ணிக்கை உயர்வு

Published

on

பிரேசில் நாட்டில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட கனமழை வெள்ளத்திற்கு 31 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புயல் தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளம் பல வீடுகளை அடித்துச் சென்றது.

இதனால் சுமார் 2,300 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் கோர தாண்டவத்தினால் 60க்கும் மேற்பட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், 31 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அத்துடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது. Mucum நகரில் உள்ள ஒரு வீட்டில் 15 உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர்.

Rio Grande do Sul மாநிலத்தை தாக்கிய மிகவும் மோசமாக புயல் என ஆளுநர் எட்வர்டோ லைட் தெரிவித்துள்ளார்.

Exit mobile version