உலகம்

ரஷ்ய ஜெனரலிடம் இளம்பெண் கொடுத்த மொபைல் போன்: அதிரவைக்கும் சம்பவம்

Published

on

ரஷ்ய ஜெனரலிடம் இளம்பெண் கொடுத்த மொபைல் போன்: அதிரவைக்கும் சம்பவம்

புடினுடைய ஜெனரல் ஒருவரிடம் பெண் ஒருவர் கொடுத்த மொபைல் வெடித்துச் சிதறியதில், அவரும் அவரது மகனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய ஜெனரல்களில் ஒருவரான Yuri Afanasevskii (64) Luhanskஇல் உள்ள தனது வீட்டிலிருக்கும்போது, பெண் ஒருவர் அவருக்கு மொபைல் போன் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அவர் அந்த போனை ஆன் செய்தவுடன், அது பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. போன் வெடித்ததில் படுகாயமடைந்த Yuriயும் அவரது மகனும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடைய மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பெண் கைது செய்யபட்டுள்ளார். ஜெனரலை கொல்ல முயற்சி என்னும் கோணத்தில் ரஷ்ய அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் உக்ரைன் உளவுத்துறை இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் தரப்பில் அந்த மொபைல் போனுக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை Yuriயிடம் கொண்டு சேர்க்க அந்த பெண்ணை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் எராளமானோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த கொலை முயற்சி சம்பவத்துடன் தொடர்புடைய பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version