உலகம்

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

Published

on

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்பட 262 பிரபலங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக, டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பிரபலங்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதினர்.

அதில் அவர்கள், “கடந்த 2022 ஆம் ஆண்டு ஜாகிர் அப்துல்லா வசந்த் யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் சமுதாயத்தில் ஒருவர் பிரிவினையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறார் என்றால் சம்பந்தப்பட்ட அரசு புகார் அளிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்காமல், அந்த நபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

அதனால், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், அரசும் காவல்துறையும் உதயநிதிக்கு எதிராக புகார் கொடுக்கவில்லை என்றால் அது உச்சநீதிமன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.

இதனால், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வருகின்றன.

Exit mobile version