உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள்

Published

on

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ரிக்டர் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 7.08 மணி அளவில் மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இருந்து தெற்கே தென்கிழக்கில் 196 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் 4.4 ஆக பதிவாகியுள்ளது என ஆப்கானிஸ்தான் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டு இருப்பதால் பொருளிழப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு விவரமும் வெளியாகவில்லை.

அதைப்போல நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா மற்றும் யாரேனும் காயமடைந்து உள்ளனரா என்று இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version