இலங்கை

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் வெற்றி

Published

on

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் வெற்றி

சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

இதில் தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இந்நிலையில் ஈழத்தமிழரின் வம்சமான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்த காச்சோங் மற்றும் டான்தின் லியான் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டனர்.

இவர்கள் மூவர் இடையே கடும் போட்டி நிலவியது. இவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version