உலகம்

இரவு 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை!

Published

on

இரவு 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள புகாரில் நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று இரவு 8 மணி நேரம் பொலிசார் விசாரணை செய்தனர்.

சமீபத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அப்போது அவர், “சீமான் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார். அவர், என்னை பயன்படுத்திக் கொண்டார் கடைசியில் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்றார்.

மேலும் அவர்,”சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார்” எனக் கூறினார்.

இந்நிலையில், சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில், நேற்று இரவு 8மணிநேரம் விஜயலட்சுமியிடம் பொலிசார் விசாரணை செய்தனர். அப்போது, பலதரப்பட்ட விஷயங்களை பொலிசார் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சீமான் மீதான புகார் குறித்த கேள்விகளை துணை ஆணையர் உமையாள் நடிகை விஜயலட்சுமியிடம் கேட்டார். குறிப்பாக கருக்கலைப்பு மற்றும் மிரட்டியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், இந்த விசாரணையின் போது நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் இருந்து வெளியேற மறுத்ததாகவும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை சீமானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version