உலகம்

INDIA கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவினரின் பெயர் பட்டியல்

Published

on

INDIA கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவினரின் பெயர் பட்டியல்

13 பேர் கொண்ட இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து.

கடந்த மாதம் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் தமிழக முதலமைச்சர்
எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டத்தின் முதல் நாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இரண்டாவது நாள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை கூடியது. அப்போது, இந்தியா ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், தமிழக முதலமைச்சர் இடம்பெற்றுள்ளார்.

இடம் பெற்றுள்ளவர்கள் யார்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சி.வேணுகோபால்
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
ராஷ்டிரிய ஜனதா கட்சி தேஜஸ்வி யாதவ்
ஐக்கிய ஜனதா தள கட்சியின் சார்பில் லல்லக் சிங்
ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
சமாஜ்வாதி கட்சி சார்பில் ஜாதவ் அலிக்கான்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி.ராஜா
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா
பிடிபி கட்சியின் தலைவர் மெஹபூபா முக்தி
குறிப்பாக, இந்த இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இடம்பெறவில்லை.

Exit mobile version