உலகம்

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை

Published

on

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை

கனேடிய குடியுரிமை பெற்ற ஒருவரின் மனைவி இந்தியாவில் பிரசவித்ததால், தன் மகளை கனடாவுக்கு அழைத்து வருவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லிங்கன் (Lincoln Sekkappan), ஒரு கனேடிய குடிமகன். அவரது மனைவி கமலம் (Kamalam Elangovan) கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார்.

ஆனால், இந்தியாவுக்கு வந்திருந்தபோது, தன் மகளான ஆவிரா (Avira Mutho)வை பிரசவித்துள்ளார் கமலம். தம்பதியர் தங்கள் மகளுக்கு குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பித்தபோது, சில ஆவணங்களை இணைக்கத் தவறியுள்ளார்கள்.

முதல் விண்ணப்பமே பிரச்சினைக்குரியதாகிவிட, இரண்டாவது விண்ணப்பத்தில் தேவையான ஆவணங்களை இணைத்தும், சில ஆவணங்கள் இல்லை என்றே புலம்பெயர்தல் அலுவலகம் கூறியுள்ளது. ஆக, இரண்டு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

இதை ஒரு எச்சரிக்கை செய்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். காரணம், முதல் விண்ணப்பத்தில் தவறு வராதிருந்திருக்குமானால், இவ்வளவு கால தாமதத்திற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

இது குறித்து விளக்கிய புலம்பெயர்தல் சட்டத்தரணியான Chris Veeman, இந்த தம்பதியரின் குழந்தை விடயத்தில் பல பிரச்சினைகள் உள்ளதாக தெரிவிக்கிறார்.

முதலாவது, தம்பதியர் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்படவேண்டும் என்பது குறித்த விவரங்களை சரியாக பின்பற்றவில்லை. ஆகவே, முதல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இரண்டாவது விண்ணப்பம் குறித்து புலம்பெயர்தல் துறையிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

ஆக, புலம்பெயர்தல் எளிதான ஒரு செயல்முறை அல்ல என்கிறார் Chris. மனித தவறுகளும் தொழில்நுட்பப் பிரச்சினைகளும் பல குழப்பங்களை உருவாக்கிவிடுகின்றன என்கிறார் அவர். இந்த தம்பதியரைப் பொருத்தவரை, குழந்தையின் விண்ணப்பங்களை இறுதி செய்ய, ஒருவேளை அதிகாரப்பூர்வ சட்டத்தரணி ஒருவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்படலாம் என்கிறார் அவர்.

Exit mobile version