உலகம்

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

Published

on

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக ஆர்வலரான Mokhmad Abdurakhmanov என்பவரைக் கொல்ல திட்டம் தீட்டியதற்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Valid, ஆயுதம் ஒன்றை வாங்கியதாகவும், கூலிக்கு கொலை செய்யும் ஒருவரை ஏற்பாடு செய்ததாகவும், அவரை ஜேர்மனிக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ததாகவும், Mokhmadஇன் சகோதரரையும் அவரது வீட்டையும் வேவு பார்த்ததாகவும், துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த கொலை முயற்சி, Mokhmadஐ அமைதியாக்குவதற்காக மட்டுமானதல்ல, அவரது சகோதரரான Tumso Abdurakhmanovஐ மிரட்டுவதற்காகவும்தான்.

ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை: பின்னணி | 10 Years In Prison For A Russian In Germany

அதாவது, Tumso, செசன்யாவின் தலைவரான Ramzan Kadyrovஐ கடுமையாக விமர்சிப்பவர். அவர் செசன்யாவிலிருந்து தப்பியோடி ஸ்வீடனில் வாழ்ந்துவருகிறார்.

ஆகவே, அவரை மிரட்டுவதற்காகவும்தான் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. Ramzan Kadyrovஇன் ஆதரவாளரான ஒருவரின் உத்தரவின் பேரிலேயே Mokhmadஐ கொல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version