உலகம்

அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்!

Published

on

அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள்!

தைவான் ஜலசந்தி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 11 சீன போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளன.

தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இதனை தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில், தைவானை சுற்றிலும் கடந்த திங்கட்கிழமை காலை 6 மணியில் இருந்து, செவ்வாய் கிழமை காலை 6 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் சீனாவின் 11 போர் விமானங்கள் மற்றும் 10 கடற்படை கப்பல்கள் தைவானுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

இவற்றில், தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் வடகிழக்கு பிரிவிற்குள் அத்துமீறி சென்றுள்ளது. இதன்பின்னர் அந்நாட்டை சுற்றி வந்து தென்மேற்கு மூலையில் இடைக்கோட்டை மீண்டும் கடந்து சென்றது.

இதனை தொடர்ந்து, இரண்டு செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளன.

இதனால், அவற்றை விரட்டியடிக்க விமானங்கள், கப்பல்கள் மற்றும் தரை பகுதியை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஏவுகணைகள் ஆகியவற்றை பயன்படுத்தி, சீன விமானங்களை தைவான் விரட்டியடித்துள்ளது.

Exit mobile version