உலகம்
இம்ரான் கான் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!
இம்ரான் கான் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 3 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, கடந்த 5ஆம் திகதி மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், இந்த தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டதாகவும், அதில் குறைபாடுகள் இருப்பதாகவும் இம்ரான் கானின் வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், இம்ரான் கானின் தண்டனையை ரத்து செய்யுமாறு அவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கான் மீதான தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.